அமெரிக்க அரசு துணைச்செயலரை சந்தித்த மக்கள் முன்னணி! சமஷ்டியே தீர்வென வலியுறுத்தல்!!

You are currently viewing அமெரிக்க அரசு துணைச்செயலரை சந்தித்த மக்கள் முன்னணி! சமஷ்டியே தீர்வென வலியுறுத்தல்!!

அமெரிக்காவில் இருந்து வருகைதந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளருக்கும் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்குமான சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
அச்சந்திப்பில் 13ஆம் திருத்தம் தீர்வுமல்ல தீர்வுக்கான தொடக்கப்புள்ளியுமல்ல என்பதும் ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்வொரு தீர்வும் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்ல என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்தியதுடன், தமிழ்த் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித்தீர்வு எட்டப்படல் வேண்டும் என்பதனையும் ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன் இரஜபக்ச அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலைக்கு சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதனையும் மனித உரிமைகள் பேரவையில் இருந்து பொறுப்புக்கூறல் விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கோ சர்வதேச நீதிமன்றத்திற்கோ அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றிற்கோ பாராப்படுத்தப்படல் வேண்டும் என்றும் வலியறுதியிருந்தார்.
இது தொடர்பில் எழுத்து மூலமான கடிதம் ஒன்று துணை இராஜாங்கச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
கடித இணைப்பு:
பகிர்ந்துகொள்ள

Leave a Reply