அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கைக்கு விஜயம்!

You are currently viewing அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட் நேப்யூ ஓகஸ்ட் 8-9 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அவருடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்புப் பகுப்பாய்வாளர் டிலான் அய்கன்ஸ் என்பவரும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், அரசாங்கம், எதிர்க்கட்சி, சர்வதேச நாணய நிதியம், தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்களைச் சந்திக்க உள்ளார்.

மேலும் அவரது இந்த விஜயத்தின் நோக்கம், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மற்றும் ஊழலை எதிர்ப்பதற்கான முயற்சிகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply