அமெரிக்காவின் புதிய அதிபராக “Joe Biden” பதவியேற்றுக்கொள்ளவிருக்கும் நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருக்கும் சுமார் 25.000 அமெரிக்க இராணுவவீரர்களின் பின்னணிகளை “FBI” ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரங்களில் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்களின் தொடர்ச்சியாக, அமெரிக்க காவல்துறை, இராணுவம் போன்றவற்றில் இருக்கும் “Trump” ஆதரவாளர்களால் மீண்டும் அசாதாரணா சூழ்நிலைகள் ஏற்படலாமெனவும், அதியுச்ச பட்சமாக அமெரிக்கா, இராணுவப்புரட்சிக்கும் முகம் கொடுக்கவேண்டி வரலாமென எதிர்வுகள் கூறப்பட்டு வந்திருந்த நிலையில், புதிய அதிபர் பதவியேற்பு தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள சுமார் 25.000 படையினருடைய பின்னணிகளை “FBI” ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் “Joe Biden” பதவியேற்றுக்கொள்ளவிருக்கும் நிலையில், அவரது உயிருக்கோ அல்லது ஏனைய அரசியலாளர்களின் உயிருக்கோ ஆபத்துக்கள் ஏற்படாதிருக்கும் வண்ணம் பாதுகாப்புக்களை இறுக்க வேண்டிய சூநிலையில், வழக்கத்துக்கு மாறாக மூன்று மடங்கு படையினரை பணியிலமர்த்தியிருக்கும் அமெரிக்க பாதுகாப்புத்துறை, பாதுகாப்புத்துறையில் இருக்கும் “Trump” ஆதரவாளர்களால் எதிர்பாராத நேரத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படலாமெனவும் அஞ்சுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.