அமெரிக்க இராணுவ தளங்கள் தாக்கப்படும் : ட்ரம்புக்கு பதிலளித்த ஈரான் தலைவர் !

You are currently viewing அமெரிக்க இராணுவ தளங்கள் தாக்கப்படும் : ட்ரம்புக்கு பதிலளித்த ஈரான் தலைவர் !

ஈரான் மீது இராணுவ நடவடிக்கை என்ற எச்சரிக்கையை அமெரிக்கா பின்பற்றினால், ஈரான் அப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்கும் என அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

புதிய அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் ஒத்துழைக்க மறுத்தால் இராணுவ நடவடிக்கைகளை எதிகொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாகக் கூறியிருந்தார். அதில், ஈரானை கையாள இரண்டு வழிகள் உள்ளதாகவும், இராணுவ ரீதியாக, அல்லது ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே, ஈரானின் புனிதத்தை அமெரிக்கா அழிக்க முயன்றால், பிராந்தியம் முழுவதும் வெடிமருந்துக் கிடங்கில் ஒரு தீப்பொறி போல வெடித்துச் சிதறும் என நாடாளுமன்ற சபாநாயகர் முகமது கலிபாஃப் தெரிவித்துள்ளார்.

அவர்களின் இராணுவ தளங்களும், அவர்களின் கூட்டாளிகளின் தளங்களும் பாதுகாப்பாக இருக்காது என்றார். முன்னதாக ட்ரம்பின் இந்த நகர்வானது ஏமாற்று வேலை என்றே கமேனி கூறியிருந்தார்,

மேலும் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்கி வியாழக்கிழமை தெரிவிக்கையில், அமெரிக்கா தனது அதிகபட்ச அழுத்தமளிப்பது என்ற கொள்கையை மாற்றாவிட்டால் பேச்சுவார்த்தை சாத்தியமல்ல என்று கூறியிருந்தார்.

மட்டுமின்றி, ட்ரம்பின் கடிதத்தை ஈரான் முழுமையாக ஆராய்ந்து, ஓமன் வழியாக பொருத்தமான பதிலை அனுப்பியதாகவும் அராக்கி கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply