அமெரிக்க குழுவை அனுமதிக்கும் டொனால்ட் டிரம்பின் கோரிக்கை ; சீனா நிராகரிப்பு!

  • Post author:
You are currently viewing அமெரிக்க குழுவை அனுமதிக்கும் டொனால்ட் டிரம்பின் கோரிக்கை ; சீனா நிராகரிப்பு!

கொரோனா வைரஸ் குறித்து விசாரிக்க அமெரிக்க குழுவை வுகானுக்குள் அனுமதிக்கும் டொனால்ட் டிரம்பின் கோரிக்கையை சீனா நிராகரித்து உள்ளது.

வுஹான் ஆய்வுக்கூடத்தில் (Wuhan Institute of Virology) இருந்து கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்று வெளியான தகவலை தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.

டிரம்பின் கருத்துக்களுக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறியதாவது:

வைரஸ் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான எதிரி. தொற்றுநோய் வெடித்ததிலிருந்து, சீனா கொரோனா பரவுவதைத் தடுக்க மிகவும் முழுமையான மற்றும் வலுவான நடவடிக்கைகளை வெளிப்படையாக மற்றும் பொறுப்பான முறையில் எடுத்து வருகிறது.

வைரஸைக் கட்டுப்படுத்த சீனாவின் முயற்சிகள் மற்ற நாடுகளில் நோய் பரவலை சமாளிக்க சர்வதேச சமூகத்திற்கு மதிப்புமிக்க அனுபவத்தை அளித்துள்ளன. இது எங்கள் முக்கியமான பங்களிப்பின் ஒரு பகுதியாகும். இதைச் செய்ததற்காக சர்வதேச சமூகம் சீனாவைப் பாராட்டி உள்ளது.

உலகில் பல மரணங்களுக்கு சீனா மீது வழக்குத் தொடர வேண்டும் என்ற அமெரிக்க அரசியல்வாதிகளின் கூற்றில் எந்த உண்மையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என கூறினார்.

கொரோனா வைரஸ் குறித்து விசாரிக்க அமெரிக்க குழுவை வுஹானுக்கு அனுமதிக்கும் டொனால்ட் டிரம்பின் கோரிக்கையை சீனா நிராகரித்து உள்ளது.

பகிர்ந்துகொள்ள