அமெரிக்காவில் கொரோனாவால் தற்போது ஏற்பட்டுள்ள தாக்கத்தை விட, அடுத்த கட்ட பரவல் அதிகமாக இருக்கும் என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் காய்ச்சல் தொற்று மற்றும் கொரோனா தொற்று ஆகியவற்றை நாம் சந்திக்க வேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் “Robert R. Redfield”, Washington Post இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் வரும் குளிர்காலத்தில் ஏற்பட உள்ள கொரோனா தாக்கம், மிகத் தீவிரமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் காய்ச்சல் தொற்று மற்றும் கொரோனா தொற்று ஆகியவற்றை நாம் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, கொரோனா குறித்த ஆபத்தை உலகத்திடம் இருந்து சீனா மறைத்து விட்டதாகக் கூறி, அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாகாண அரசு அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு செய்தது, ஆபத்தை விளைவித்தது ஆகியவற்றுக்காக சீனாவிடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும் என்றும் Missouri மாகாண அரசு கோரியுள்ளது.