அமெரிக்க சாதனை : மிகப்பெரிய கொரோனா கடனைப் பெறவிரும்பும் அமெரிக்கா!

  • Post author:
You are currently viewing அமெரிக்க சாதனை : மிகப்பெரிய கொரோனா கடனைப் பெறவிரும்பும்  அமெரிக்கா!

கொரோனா நெருக்கடி காரணமாக இரண்டாவது காலாண்டில் 3 பில்லியன் டாலர் கடனை பெற விரும்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

2008 ஆம் ஆண்டில் நிதி நெருக்கடி மிக மோசமான நிலையில் இருந்தபோது பெறப்பட்ட முந்தைய கடன் சாதனையை விட இந்த தொகை ஐந்து மடங்கு அதிகம் என்று BBC தெரிவித்துள்ளது.

சுகாதார நிதி மற்றும் நேரடி கொடுப்பனவுகள் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளில் இந்த தொகை பயன்படுத்தப்படும்.

கடந்த மாதம், வரவு செலவு திட்டமிடல் அலுவலகத்தின் கணிப்பின்படி, அமெரிக்க வரவு செலவு பட்டியலில் இந்த ஆண்டு நிதி பற்றாக்குறை 3,700 பில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு, அமெரிக்கா 1280 பில்லியன் டாலர் கடன் வாங்கியிருந்தது.

அமெரிக்காவின் மொத்த அரசாங்கக் கடன், இப்போது 25,000 பில்லியன் டாலர்களை நெருங்கியுள்ளது. (NTB)

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள