அமெரிக்க தூதரகத்தின் கிளை அலுவலகத்திற்கு அருகில் வெடிப்பு !- ஒருவர் பலி!

You are currently viewing அமெரிக்க தூதரகத்தின் கிளை அலுவலகத்திற்கு அருகில் வெடிப்பு !- ஒருவர் பலி!

இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியில் அமெரிக்க தூதரகத்தின் கிளை அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

பல தூதரகங்கள் இராஜதந்திர அலுவலகங்கள் காணப்படும் பகுதியில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்தில் 50 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 8 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க தூதரகத்தின் கிளை அலுவலகத்திற்கு 300 மீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் கிளை அலுவலகத்திற்கு அருகில் வெடிப்பு !- ஒருவர் பலி! 1

அமெரிக்கா நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றது என சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ள அதிகாரியொருவர் கிளை அலுவலக்த்திற்கு அருகில் வெடிப்பு இடம்பெற்றுள்ளது கட்டிடம் சேதமடையவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சலோம் அலெய்ச்செம் வீதியில் பொருள் ஒன்று தரையிறங்கியுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply