அமெரிக்காவிலிருந்து வரும் “Hydroxicut Hardcore Next Gen” என்ற ஊட்டச்சத்து உணவு நிரப்பியை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் எதிராக உணவு பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது. இதன் பயன்பாடு கல்லீரல் செயலிழப்பு மற்றும் மரணத்திற்கு வழிவகுத்துள்ளதாக, ஆணையம் மேலும் கூறியுள்ளது.
உணவு பாதுகாப்பு ஆணையம் தனது வலைத்தளத்தில், ஸ்பெயினின் அதிகாரிகளிடமிருந்து இந்த அறிக்கைகளைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளதுடன், அந்த அறிக்கையில் இந்த தயாரிப்பு ஒரு சந்தர்ப்பத்தில் கல்லீரலை செயலிழக்கச் செய்ததுடன் இறப்புக்கும் காரமாயிருந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நோர்வேயில் இந்த பொருளின் விற்பனை குறித்து நோர்வே உணவு பாதுகாப்பு ஆணையம் அறிந்திருக்கவில்லை என்றும், ஆனால் நோர்வே நுகர்வோர் வெளிநாட்டு வலைத்தளங்களில் இதை வாங்குவதற்கான உத்தரவுகளை மேற்கொண்டுள்ளார்கள் என்று தகவல் கிடைத்துள்ளதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது .
இந்த தயாரிப்பு “Muscletech” என்ற அடையாளப் பெயரில் விற்கப்படுகின்றது. இது பல வெளிநாட்டு வலைத்தளங்கள் மற்றும் இணைய சில்லறை விற்பனையாளர்கள் மூலமும் தனி நபர்களுக்கு விற்கப்படுகின்றது. (NTB)
மேலதிக தகவல்: VG