அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த சூறாவளி: ஜோ பைடன் உருக்கம்!

You are currently viewing அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த சூறாவளி: ஜோ பைடன் உருக்கம்!

அமெரிக்காவின் மிசிசிப்பியில் சூறாவளியின் கோர தாண்டவத்தால் 24 பேர் பலியானது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மிசிசிப்பியில் இருந்து அலபாமா வரை 170 மைல் வேகத்தில் சூறாவளி தாக்கியது. இதில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் ரீவ்ஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால நிலையை பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மிசிசிப்பியில் பேரழிவு தரும் சூறாவளியில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காகவும், அன்புக்குரியவர்களைக் காணாமல் போனவர்களுக்காகவும் ஜில் மற்றும் நானும் பிரார்த்தனை செய்கிறோம். மிசிசிப்பி முழுவதிலும் இருந்து வரும் படங்கள் இதயத்தை நொறுக்கும் வகையில் உள்ளன.

சேதத்தின் முழு அளவை நாங்கள் இன்னும் மதிப்பிடும்போது, எங்கள் சக அமெரிக்கர்கள் பலர் குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக வருத்தப்படுவது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் வீடுகளையும், வணிகங்களையும் இழந்துள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் FEMA நிர்வாகியிடம் இதுகுறித்து பேசியதாக கூறிய பைடன், அவர் ஏற்கனவே அவசரகால பதிலளிப்பு பணியாளர்கள் மற்றும் ஆதாரங்களைத் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை ஆதரிப்பதற்கும், சேதத்தை மதிப்பிடுவதற்கும், எங்கள் கூட்டாட்சி ஆதரவை மிக விரைவாக தேவைப்படும் இடங்களில் கவனம் செலுத்துவதற்கும் அனுப்பியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

அதேபோல் மாநில மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் ஜோ பைடன் பேசினார். இடிபாடுகளில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து செயல்படுவதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply