மீண்டும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி; ஈராக் தலைவர் அழைப்பு விடுத்து உள்ளார்.
அமெரிக்கப் படைகளின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், நேற்று இரவு கத்யுஷா ராக்கெட்டுகள் பாக்தாத்திற்கு வடக்கே ஈராக்கிய விமானத் தளத்தை குறிவைத்து தாக்கின. அங்கு அமெரிக்கத் தலைமையிலான கூட்டணிப் படைகள் முகாமிட்டு உள்ளன.
இந்த நிலையில் அமெரிக்க ராணுவத்தை வெளியேற வலியுறுத்தி ஈராக் தலைவர் மொக்தாதா சதர் அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்ட பேரணி நடத்த மக்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார். ஈராக்கின் வானம், நிலம் மற்றும் இறையாண்மை ஆகியவை ஒவ்வொரு நாளும் படைகளை ஆக்கிரமிப்பின் மூலம் மீறப்படுகின்றன என கூறி உள்ளார்.