அமெரிக்க வரிக்குப் பதிலடி கொடுத்த சீனா!

You are currently viewing அமெரிக்க வரிக்குப் பதிலடி கொடுத்த சீனா!

அமெரிக்க வரிக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக  சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்  7 அரிய வகை தனிமங்களை ஏற்றுமதி செய்வதை சீனா நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க பொருட்களுக்கு சீனா  விதித்த  வரியை மீளப்பெறவில்லையென்றால் மேலும்   50% வரி விதிப்போம் என  ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அதற்குப் பதிலாகவே சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த  அரியவகைத் தனிமங்கள் பூமியிலிருந்து சுத்தமாக கிடைக்காது. சில கலவைகளோடுதான் கிடைக்கும். இதை நீக்கி சுத்தப்படுத்தி, தூய்மையாக மாற்றுவதற்குரிய கட்டமைப்புகள் சீனாவிடம்தான் சிறப்பானதாக இருக்கிறது. எனவே உலக நாடுகள் சீனாவைத்தான் நம்பி இருக்கின்றன.

சீனாவின் இந்த  ஏற்றுமதித் தடையால்  வேறு நாடுகளை  விடவும் அமெரிக்காதான் அதிகம் பாதிக்கப்படும். காரணம் இந்த தனிமங்களை அதிகம் நம்பியிருப்பது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள்தான்.

இந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டால் அது அமெரிக்க  தொழிநுட்பத் துறையையே உலுக்கி எடுத்துவிடும். ஆனால் இந்த கட்டுப்பாடுகளை சீனா திடீரென விதிக்கவில்லை. ஏற்கெனவே இரண்டு கட்ட கட்டுப்பாடுகளைவிதித்துள்ளது இது மூன்றாவது கட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு இன்று இரவு முதல் 104% வரியை விதிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சீனாவின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா விதித்த வரியை அடுத்து, அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரியை விதித்தது.

குறித்த வரியை உடனே திரும்பப் பெறாவிட்டால் சீனா மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், வரியை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை சீனா எடுக்காததால் அந்நாட்டின் சில பொருட்கள் மீது அமெரிக்கா 104 சதவீத வரியை விதித்துள்ளது.

 

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுப்பதற்காக அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது. இதுபோல், கனடா போன்ற வேறு சில நாடுகளும் பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளன.

இதனால் உலக வர்த்தக போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் மீது வரி விதிப்பு கிடையாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதால், அந்த நாட்டுக்கு மட்டும் வரி விதிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply