அமெரிக்க விமானம் தாங்கிக்கப்பலில் “கொரோனா”! தகவலை வெளிப்படுத்திய கப்பலின் தலைமைத்தளபதி வேலையிழந்தார்!!

You are currently viewing அமெரிக்க விமானம் தாங்கிக்கப்பலில் “கொரோனா”! தகவலை வெளிப்படுத்திய கப்பலின் தலைமைத்தளபதி வேலையிழந்தார்!!

அமெரிக்க முப்படைகளின் கட்டமைப்பில் பிரதான பங்காற்றிவரும் மாபெரும் விமானம் தாங்கிக்கப்பலான “USS Theodore Roosevelt” கப்பலில் “கொரோனா” வைரசின் தாக்கத்தால் 100 வரையிலான அமெரிக்கப்படையினர் பாதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க தலைமமைக்கு தகவல் வழங்கிய கப்பலின் தலைமை தளபதி அவரது பணியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டுள்ளார்..

5000 படையினரை கொண்டுள்ள மேற்படி கப்பலில் பணியாற்றும் 100 படையினருக்கு “கொரோனா” தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், தொற்று ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைக்கும் வசதி கப்பலில் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர மருத்துவ உதவிகளை வேண்டியும், கப்பலில் பணியிலுள்ள அனைத்து படையினருக்கும் மருத்துவ சோதனைகள் செய்யப்படவேண்டுமெனவும் அவசர வேண்டுகோளை மேற்படி கப்பலின் தலைமை தளபதி விடுத்திருந்ததாக முன்னதாக செய்திகள் வெளிவந்திருந்தன.

எனினும், இப்போது வந்துள்ள தகவல்களின்படி, குறித்த கப்பலின் தலைமை தளபதி அவரது பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க கடற்படை அமைச்சகத்தின் பிரதியமைச்சரான “Thomas Modly” தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.

“USS Theodore Roosevelt” விமானம் தாங்கிக்கப்பலின் தலைமை தளபதியான “Brett Crozier”, கப்பலின் நிலைமை பற்றி, தலைமையகத்துக்கு அனுப்பிவைத்திருந்த அவசர குறிப்பில், கப்பலில் “கொரோனா” தொற்று வேகமாக பரவிவருவதாகவும், அதனால், கப்பல் தற்போது நங்கூரமிட்டிருக்கும் “Guam” தளத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் தரையிறக்கப்பட வேண்டுமெனவும், கப்பலின் அனைத்து படையினரும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளதோடு, மரபுவழியிலான போரேதும் தற்போது நடைபெறாத நிலைமையில் அனாவசியமாக தனது படையினரை “கொரோனா” வைரசினால் இழக்க தான் விரும்பவில்லையெனவும், கப்பலிலுள்ள படையினரை பாதுகாப்பதற்கு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படா விட்டால், கப்பலின் படையினரில் பலரை இழக்க வேண்டி வருமெனவும், இதனால் மேற்படி கப்பல் மேற்கொண்டுவரும் வழமையான இராணுவ / கடற்படை நடவடிக்கைகளில் மந்தநிலை ஏற்படுமெனவும் குறிப்பிட்டிருந்தாக தெரிவிக்கும் அமெரிக்க கடற்படை அமைச்சகத்தின் பிரதியமைச்சரான “Thomas Modly”, எனினும், மேற்படி அவசர தகவல்களை அவசியமில்லாதவர்களுக்கும் கப்பலின் தலைமை தளபதி தெரிவித்திருந்ததால், மேற்படி தகவல் ஊடகங்களுக்கு கசிந்துவிட்டிருப்பதாகவும், இத்தகவல் ஊடகங்களில் வெளியானதால், குறித்த கப்பல் தொடர்பாகவும், படையினர் தொடர்பாகவும் அனாவசியமான தகவல்கள் பொதுவெளியில் பரவுவதற்கு கப்பலின் தலைமை தளபதி காரணமாகவிருந்தார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தி மேம்பாடு: 13.04.2020

இறுதித்தகவல்களின்படி, மேற்படி கப்பலிலிருந்து 3967 படையினர் தரையிறங்கியிருப்பதாகவும், 585 படையினர் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகவும் “Reuters / ரொய்ட்டர்ஸ்” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விமானம் தாங்கிக்கப்பலில்

அதேவேளை, முன்னதாக கப்பலில் “கொரோனா” தொற்று பரவியமை தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்த குறித்த கப்பலின் தலைமை தளபதியை பதவிநீக்கம் செய்திருந்த, அமெரிக்க கடற்படை அமைச்சகத்தின் பிரதியமைச்சர், மேற்படி கப்பலின் தலைமை தளபதியை பதவிநீக்கம் செய்த விடயத்தில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டதால் அவரும் தனது பதிவியிலிருந்து விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புபட்ட செய்தி:

“கொரோனா” பிடியில் அமெரிக்க விமானம் தாங்கிக்கப்பல்!

பகிர்ந்துகொள்ள