அமேரிக்காவில் சூறாவளி மற்றும் புயல்கள் வீசியதால் குறைந்தது 19 பேர் பலி !

You are currently viewing அமேரிக்காவில் சூறாவளி மற்றும் புயல்கள் வீசியதால் குறைந்தது 19 பேர் பலி !

breaking

 

நான்கு அமெரிக்க மாநிலங்களில் சூறாவளி மற்றும் புயல்கள் வீசியதால் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீடுகளை பல சேதமடைந்ததுடன் நூறாயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.. ஞாயிற்றுக்கிழமை பல மாநிலங்களில் 500,000 பேர் காயமடைந்தனர்.

வடக்கு டெக்சாஸில் 7 பேரும், ஆர்கன்சாஸில் 8 பேரும், ஓக்லஹோமாவில் 2 பேரும், கென்டக்கியில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுளள்து.

டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட், தனது மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பகுதிகள் பேரிடர் அறிவிப்புக்கு உட்பட்டுள்ளன என்றார்.

டெக்சாஸின் குக் கவுண்டியைச் சேர்ந்த ஷெரிப் ரே சப்பிங்டன், அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கையில் இரண்டு மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளனர் என்றார்.

இதற்கிடையில் மின்னல், இடி மற்றும் பலத்த மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடந்த இண்டியானாபோலிஸ் 500 பந்தயம் நான்கு மணி நேரம் தாமதமானதால் சுமார் 125,000 பார்வையாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments