அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர். ஆய்வின்படி, சூரிய ஒளியின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை வைரஸ் பரவலை குறைப்பதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க கூடுமென்று தெரிவித்துள்ளனர்!
மேலும், அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை பலவீனப்படுத்தும் என்றும் சூரிய ஒளியில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் கொரோனாவை பலவீன படுத்தி அழிப்பதாகவும், 75 ℉ முதல் 80 ℉ வரை சூரிய ஒளி வெளிப்படும்போது சில நிமிடங்களில் வைரஸ் இறக்க கூடும் என தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சூரிய ஒளி 95 ℉ அல்லது 38 ℃ ஆக இருக்கும் போதும், 80 விழுக்காடு அளவுக்கான ஈரப்பதமும், 18 மணிநேரம் என்ற கொரோனாவின் ஆயுட்காலத்தை பாதியாக குறைக்கிறது. சூரிய ஒளியில் உள்ள ஐசோபிரைல் (Isopropyl) 30 விநாடிகளில் கொரோனாவை கொல்லும் என தெரிவித்துள்ளார். அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் கொரோனா வைரஸ் பரவுவதை வேகமாக தடுக்கிறது குறிப்பாக சூரிய ஒளியில் உள்ள ஐசோபிரைல் மற்றும் ஆல்கஹாலில் (Isopropyl Alcohol) கொரோனா வைரஸ் 30 வினாடிகளில் அழிவதை பார்க்க முடிகிறது என்றனர்.
சூரிய ஒளி பூமியின் மீது படும்போது தரை தளத்திலும் காற்று மண்டலத்திலும் அது வேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது அதன் விரயம் குறையவும் செய்கிறது. குறிப்பாக இந்தியாவில் கோடை காலம் என்பதால் இந்தியாவிற்கு இது மிக சாதகமாக உள்ளது என தெரிவித்துள்ளனர். ஆனாலும் சமூக விலகளும் முகம் கவசம் அணிவதும் எந்த விதத்திலும் கைவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.