அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமையை வலியுறுத்தியது அமேரிக்கா!

You are currently viewing அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமையை வலியுறுத்தியது அமேரிக்கா!

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமையை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஆசியானின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டின் போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தார். அலிசப்ரியின் சமீபத்தைய நியமனத்திற்கு இராஜாங்க செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இலங்கை மக்களிற்கான அமெரிக்காவின் ஆதரவை அவர் மீள வலியுறுத்தினார்.

இலங்கையின் மிகவும் நலிந்த நிலையில் உள்ளவர்களிற்கும் சவாலன தருணத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குமான அமெரிக்காவின் 179 மில்லியன் டொலர் உதவியை அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையை பொருளாதார ஸ்திரதன்மையின் பாதையில் மீண்டும் கொண்டுசெல்வதற்கு சர்வதேச நாணயநிதியத்துடன் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இலங்கை இந்த தருணத்தை நெருங்கும் தருணத்தில் நாட்டின் அரசமைப்பின் நடைமுறைகளின் அடிப்படையில் செயற்படவேண்டியதன் அவசியத்தையும்,அமைதியாக ஓன்றுகூடுவதற்கான உரிமை உட்படஅனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் வலியுறுத்தினார்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply