அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறோம் என நோர்வே தூதுவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறோம். சட்டத்தின் ஆட்சி, அடிப்படை உரிமைகளை மதிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம். அமைதியாக ஒன்றுகூடுவதற்கும், சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு என நோர்வே தூதுவர் தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டக்களத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைகிறேன். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான உரிமை முக்கியமானது.காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கான உடனடி அனுமதியை வழங்கவேண்டும். இலங்கைக்கு பரஸ்பர மரியாதையும் ஒத்துழைப்பும் தேவை என சுவிற்சர்லாந்து உயர்ஸ்தானிகர் டொமினிக் ஃபர்க்லர் குறிப்பிட்டுள்ளார்.
“ ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன. பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டத்திற்கான உரிமை ஆகியவை அனைத்து சுதந்திரமான சமூகங்களின் அடித்தளமாகும். எனவே அவை பாதுகாக்கப்பட வேண்டும் என நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் குறிப்பிட்டுள்ளார்.