அமைதி உச்சிமாநாட்டின் அறிக்கையை நிராகரித்த சவுதி அரேபியா, இந்தியா!

You are currently viewing அமைதி உச்சிமாநாட்டின் அறிக்கையை  நிராகரித்த சவுதி அரேபியா, இந்தியா!

உக்ரைன் அமைதி உச்சிமாநாட்டின் அறிக்கையை ஏற்க பிரேசில், இந்தியா, சவுதி அரேபியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் மறுத்துள்ள தகவல் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. உக்ரைன் அமைதி உச்சிமாநாட்டில் 80க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள், அந்த நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொண்டு அதன் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது.

ஆனால் பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட முக்கிய பலம்பொருந்திய நாடுகள் சில கூட்டு அறிக்கை ஒன்றில் கையெழுத்திட மறுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இரண்டு நாள் முன்னெடுக்கப்பட்ட இந்த அமைதிப் பேச்சுவார்த்தையானது உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியால் வரவேற்கப்பட்டதுடன், அமைதிக்கான முதற்படி இதுவென்றும் குறிப்பிட்டார்.

ஆனால் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைவரும் ஒப்புக்கொள்ள மறுத்துள்ளதாகவும், ரஷ்யா உலகை இரண்டாக பிரித்துள்ளது என்றும் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இறுதி அறிக்கையானது ஐ.நா. சாசனத்தை மதிக்கும் அனைவருக்கும் பொதுவானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் சுமார் 100 நாடுகள் கலந்து கொண்டன.

ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் சீனா இந்த மாநாட்டை புறக்கணித்தது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கூட்டாளிகளே கலந்து கொண்டனர்.

இருப்பினும் லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த நாடுகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், இறுதி அறிக்கையை மூன்று முக்கிய ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகள் மற்றும் 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் உட்பட 80 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஏற்றுக்கொண்டன.

முக்கியமாக ரஷ்யாவுடன் வணிக ரீதியாக நெருக்கமான நாடு என அறியப்படும் துருக்கி, உக்ரைன் குறித்த இறுதி அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. மட்டுமின்றி, அர்ஜென்டினா, ஈராக், கத்தார் மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

ஆனால் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள சவுதி அரேபியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments