அரசியலை தொடப்போய் சேதாரம் அதிகம்…

You are currently viewing அரசியலை தொடப்போய் சேதாரம் அதிகம்…

தனியே வைத்தியசாலை விடயத்தோடு நின்றிருந்தால் இன்னும் சிலநாட்கள் நிலைத்திருப்பார், அர்ச்சுனா…

அரசியலை தொடப்போய் சேதாரம் அதிகம்…

முதலமைச்சர் பதவியை பெற்றிருந்தால், அழிவு இருந்திருக்காது என அரசியல் (😁) பேச முற்படுகிறார்…

இவர் வந்துதான் இதை சொல்லவேண்டும் என்று நினைத்தாரோ தெரியவில்லை. 1987 இலேயே காரணங்களோடு அதை நிராகரித்து முப்படைகளையும் கட்டி, அரசாண்டவர் சிந்திக்கத்தெரியாதவர் என்கிறார்…

அரசியல் பேச இயலாமல் அரசியல் பேசுபவர்களை கற்றுக்குட்டி என்பார்கள்; இவர் அந்த வரையறைக்குள்ளும் வர இயலாதவர்…

விகாரைக்கு முன் நின்று சத்தம் போடுபவர்கள் என்றும் அபத்தமாக பேசத்தெரிந்த அர்ச்சுனா, அந்த விகாரைக்கு முன்னால் ஏன் போராட்டம் நடக்கிறது என்ற காரணமே தெரியாதவர்; அதனால்த்தான் கற்றுக்குட்டியாகவும் அவரால் முடியாது…

தந்தை நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தால், தனயனும் அப்படி இருக்க வேண்டியதில்லை என்பதற்கு இன்றைய உதாரணம் அவர்…

தன்னை விமர்சிப்பவர்களை மக்கள் கண்ட இடத்தில் அடிப்பார்கள் என்கிறார். அதுவும் தன்னை விமர்சிப்பவர்கள் கொழும்புக்குள் நுழைய முடியாது என்பது போலவும் பேசுகிறார்…

மக்களை வன்முறைக்கு தூண்டுகிறாரா அல்லது கொழும்பு பாதாள உலக உறுப்பினரா அவர் என்பதை அவரே தெளிவு படுத்த வேண்டும்…

வலம்புரி உணவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரனும், சட்டவாளர் திரு. சுகாசும் உணவருந்த வந்தபோது அங்கிருந்த தான் அவர்களிடம் வலிந்து பேச வருவாரென அவர்கள் எதிர்பார்த்ததாகவும், ஆனாலும் தான் அவர்களிடம் போய் பேசவில்லை என்றும் கூறுகிறார்…

என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்😁. இவரிடம் வலிந்து போய் குசலம் விசாரிக்குமளவுக்கு தான் ஒரு VVIP என அர்ச்சுனா நினைத்தால் அதற்கு கஜேந்தி்ரனோ, சுகாசோ பொறுப்பல்ல…

ஒரு நாடளுமன்ற உறுப்பினர்
தன்னிடம் வலியவந்து பேசவேண்டும் என்ற மனோநிலையில் இருக்கும் அர்ச்சுனா, வைத்தியத்துறையில் தனக்கு கீழ் பணியாற்றும் ஏனையவர்களிடம் எப்படி நடந்து கொள்வார் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல…

இன்று தனக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாக நம்பும் அர்ச்சுனா, பேச்சிலும், செயலிலும் தெளிவும், கட்டுப்பாடும், நாவடக்கமும் கொண்டு நடக்க மறந்தால், இன்றைய மக்கள் ஆதரவு வெறும் கானல் நீராகிவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது; இந்த நிலை மிக அருகிலேயே வந்திருப்பதை அர்ச்சுனா புரிந்து கொள்ள வேண்டும்…

குகன் யோகராஜா
13.07.2024

பகிர்ந்துகொள்ள

Leave a Reply