அரசியல் வாதிகளின் செல்வாக்கால் வேலை பெற்றவர்கள் ஆர்ப்பாட்டம்!

You are currently viewing அரசியல் வாதிகளின் செல்வாக்கால் வேலை பெற்றவர்கள் ஆர்ப்பாட்டம்!

கடந்த வருடம் வழங்கப்பட்ட செயல் திட்ட உதவியாளர்கள் நியமனம் தற்காலிகமாக கடந்த வருடமே நிறுத்தி வைக்கப்பட்டது. தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினுடாக பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டது.

நல்லாட்வி அரசாங்கத்தினை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காப்பாற்றியமை யு.என்.பி அரசுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்குக்காக வடக்கு கிழக்கில் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து கூட்டமைப்பு மற்றும் அன்றைய அரசின் எம்.பி மார் ஊடாக அவர்களின் செல்வாக்கில் வேலைக்காக அமர்த்தப்பட்டவர்கள் கோத்தபாய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்ற காரணத்தினால் குறித்த நியமனம் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் தேர்தல் முடிவடைந்து பல மாதங்களாகியும் அவர்களுக்கான நியமனம் மீண்டும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் அனைவரும் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்தனர்.

பகிர்ந்துகொள்ள