அரச மகுடி அங்கயன் ஆதரவாளரால் பெண் உட்ப்பட பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!

You are currently viewing அரச மகுடி அங்கயன் ஆதரவாளரால் பெண் உட்ப்பட பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!

விசாரணைக்கு என அழைத்த பிரதேச சபை உறுப்பினரை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் அவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள, வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜோன் ஜிப்ரிக்கோ வீட்டின் மீது நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதல் அங்கஜன் ஆதரவாளரால் நடாத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

இத் தாக்குதலில் பிரதேச சபை உறுப்பினரின் தந்தையார் காயமடைந்ததுடன் இளவாலைப் காவல் நிலையத்தில் இதுதொடர்பான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதன் பிரகாரம் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் விடுதலை செய்யப்பட்ட அன்றைய தினம் சந்தேக நபர், தன்னை பிரதேச சபை உறுப்பினரும் அவரது குடும்பத்தினரும் தாக்கியதாக தெரிவித்து தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நேற்று மாலை பிரதேச சபை உறுப்பினர் வீட்டுக்குச் சென்ற இளவாலை காவல்துறையினர் 15 பேர் பிரதேச சபை உறுப்பினரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று தாக்கி உள்ளனர். இதில் பிரதேச சபை உறுப்பினர் பலத்த தாக்குதலுக்கு உள்ளானதுடன் பிரதேச சபை உறுப்பினரின் சகோதரியும் தாக்குதலுக்குள்ளானார்.

இதனை அடுத்து பிரதேச சபை உறுப்பினருடைய சகோதரி மயக்கமடைந்த நிலையில் காவல் நிலையத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் எந்த ஒரு முதலுதவி சிகிச்சைகள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து குறித்த காவல் நிலையத்திற்கு வருகை தந்த பிரதேசசபை உறுப்பினரின் நண்பர்களால் 1990 அவசர நோயாளர் காவு வண்டிமூலம் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது காயமடைந்த ஏனைய குடும்பத்தினரையும் காவல்துறையினர் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் தாய் தந்தை மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜிப்ரிக்கோவின் தாய், தந்தை, ஒரு சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜிப்ரிக்கோவுக்கும் மற்றைய சகோதரிக்கும் பிணை வழங்கப்படவில்லை.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply