ஈரானில் நடைபெற கூடாது என்பதற்காக அவர்கள் அமெரிக்காவை தடுக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
கடந்த மாதம் தான் அமெரிக்கா அதிகாரிகள், சவூதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இராணுவ தளபாடங்கள் விற்பனை தொடர்பாகவும் இந்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.
கத்தாருக்கு எம்க்யூ -9 ரியப்பர் ட்ரோன் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டது. சவூதி அரேபியாவுக்கு ரொக்கெட் மேம்படுத்த உதவுவதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனாலும் ஈரான் மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகளின் ஆதரவு என்பது அமெரிக்காவுக்கு கிடைக்கவில்லை.
இதற்கிடையே தான் அடுத்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது