அருகதையற்ற சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளை வைத்து கிழட்டு நரி ரணிலின் சதிமுயற்சி!

You are currently viewing அருகதையற்ற சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளை வைத்து கிழட்டு நரி ரணிலின் சதிமுயற்சி!

சிங்கள பேரினவாத  அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது.

சிங்கள பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு குறித்த புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது.

இதன் படி,   தமிழினத்திற்கு  துரோகம் விளைவிக்கும் உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

அருகதையற்ற சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளை வைத்து கிழட்டு நரி ரணிலின் சதிமுயற்சி! 1

புலம்பெயர்  தமிழர் அமைப்பு  மீது தடையை   எடுத்துள்ளோம் என்ற மாய வலையில் தமிழர்களை  வீழ்த்த சதிமுயற்சியில்  ரணில் இறங்கியுள்ளார் 

​2009ம் ஆண்டு 8ம் திகதி ஆவணிமாதம் பாரிஸ் நகரில் ஐந்து கண்டங்களிலும் இருந்து வந்த புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்டது தான் உலகத்தமிழர் பேரவை. 15 நாட்டுப் புலம்பெயர் தமிழர்களால் எமது தேசியப் போராட்டத்தைத் தெடர்ந்து போராடவென இறுக்கமான முடிவுடன் உருவாக்கப்பட்டதுதான் இந்த அமைப்பு.

எஸ். ஜே. இமானுவெலின் தலைமையில் இயங்கி வந்த உலகத்தமிழர் பேரவை 2010ம் ஆண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Robert O’Blake உடன் திரு.சுரேன் சுரேந்திரன், மதகுரு இமானுவெல், திரு.எலியாஸ் ஜெயராஜ் மற்றும் திருமதி. புஸ்பராணி ஆகியோர் ஒரு சந்திப்பொன்றை ஏற்படுத்துகின்றனர். இச்சந்திப்பிற்குப் பின் உலகத்தமிழர் பேரவையில் அங்கம் வகித்த அத்தனை அமைப்புக்களும் தூக்கி எறியப்படுகின்றன. இவ்வமைப்பு மதகுரு உட்பட ஒரு சில தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இன்று இயங்கி வருகின்றது. தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அருகிதையை இவ்வமைப்பு இழந்து நிறுவனமயப்படுத்துப் படுகின்றது. மேய்ப்பவராக இருந்த மதகுரு மேய்க்கப்படுபவராக மாறுகின்றார்.

2000ம் ஆண்டிலிருந்து தமிழீழத்   தேசியத் தலைவரை புகழ்பாடிய மதகுரு இமானுவெல்  2010 களில் இருந்து மெதுவாகக் குத்துக்கரணம் அடிக்கத் தொடங்குகிறார். தேசியத் தலைவர் தலையில் சுமந்த போராட்டத்தை நாம் தோளிலாவது சுமக்க வேண்டாமா என்று போதித்த போதகர் இப்போ சிறிசேனாவை தனது தலைவர் என்று ஏற்றுக்கொண்டு தமிழினத்தைச் சிலுவையில் அறைந்து விட்டார். இனவழிப்புச் செய்த சிங்களத் தலைவர்களுடன் நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழினத்தின் அரசியரபிலாசைகளை அடமானம் வைத்துவிட்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply