மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அருட்தந்தை இராயப்பு யோசப் இன்று வியாழக்கிழமை அதிகாலை சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.நீண்ட காலம் உடல் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த அருட்தந்தை இன்று வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில் மணியளவில் உடல் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதில் மரணமடைந்துள்ள ஆண்டகை தமிழர்களின் உரிமைக்காக நீண்ட நெடுங்காலமாக குரல் கொடுத்து வந்த ஒருவர் என்பதுடன் தமழ் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது


