அறப்போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞனை கைதுசெய்த சிறீலங்கா காவல்த்துறை!

You are currently viewing அறப்போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞனை கைதுசெய்த சிறீலங்கா காவல்த்துறை!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தின் துணையுடன் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தினை கொழும்பு மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு அனுப்பி அங்கிருந்து பெறப்பட்ட விபரத்துக்கு அமையவே கைது செய்திருப்பதாக பருத்தித்துறை சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் பருதித்துறை காவல்த்துறை நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்யக்கோரி அவரின் குடும்பத்தார் காவல்த்துறை நிலையத்தின் வாசலில் காத்திருப்பதாக தெரியவருகிறது 

கைதானவருக்கு 26 வயது என்று தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள