தாம் இப்போது அரசியல் வாழ்விலிருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இட்ட பதிவொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனது பொதுக் கடமைகளை நான் முடித்துக் கொண்டு, எனது முயற்சிகளுக்கு ஆதரவளித்த, வழிகாட்டிய, ஆக்கபூர்வமாக விமர்சித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். உங்கள் நம்பிக்கையும் ஊக்கமும் தான் என்னை இந்த பயணம் முழுவதும் தாங்கிய தூண்கள்.
நான் இந்த அத்தியாயத்தை மூடும்போது, இந்த சேவையின் காலத்தின் பாடங்களையும் நினைவுகளையும் எப்போதும் என்னோடு சுமப்பேன். இனி வரும் நாட்களில் இலங்கை தனது முழு ஆற்றலையும் பூர்த்தி செய்யும் என்று உங்கள் அனைவரையும் போல நானும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இவர் மகிந்த . ரணில் போன்ற பேரினவாத சிங்கள அரசியல்வாதிகளின் நெருங்கியவராக இருந்ததுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்களில் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது