அச்சுறுத்தலுக்கு அடிபணியாது இலக்கு நோக்கி பயணிக்கும் தியாக தீபம் லெப் .கேணல் திலீபன் ஊர்திப்பவனி .
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் பொத்துவில் தொடங்கி நல்லூர் வரையான திருவுருவப் படம் தாங்கிய நினைவூர்தி தடைகளை உடைத்து புதிய மிடுக்குடன் மாங்குளம் ஊடக கிளிநொச்சி நகரை நோக்கி சென்றது இந்நிலையில் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5 ஆம் நாளாகிய நேற்று கிளிநொச்சியில் வட்டகச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் தொடங்கியது
இதன் போது தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி முன் தமிழீழத்தின் எதிர்கால சிற்பிகளான மாணவர்கள் தியாக தீபம் திலீபனை நினைவேந்தினார்கள்
கிளிநொச்சி பள்ளி மாணவர்களின் நினைவேந்தலிற்கு பிறகு தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் ஊர்திப்பவனி பரந்தனூடாக முல்லைத்தீவை நோக்கி பயணித்தது
6 ஆம் நாளாகிய இன்று (20.09.2023) வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் அலையலையாய் திரண்டு தியாக தீபம் திலீபனை நினைவேந்தினார்கள்