அழியப்போகும் உலகம்: நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சியான கணிப்புகள்!

You are currently viewing அழியப்போகும் உலகம்: நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சியான கணிப்புகள்!

உலக அழிவுக்கான காரணங்கள் தொடர்பில் நிபுணர்கள் சில கணிப்புகளை முன்வைத்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளாக உலகின் அழிவு குறித்து பலர் தமது கணிப்புகளை முன்வைத்து வருகின்ற நிலையில், தற்போது நிபுணர்கள் தமது கணிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, அணு ஆயுதப்போர், விண்கற்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு என பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

இன்றைய சூழலில் அணு ஆயுதப்போர் உலகின் அழிவிற்கு காரணமாக இருக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுதங்களின் வெடிப்புகள் உடனடி அழிவு மற்றும் பாரிய உயிர் இழப்பை ஏற்படுத்தும். நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பையும் உண்டாக்கும்.

மேலும் “Nuclear Winter” என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அதாவது, எரியும் நகரங்கள் மற்றும் காடுகளின் புகை சூரிய ஒளியைத் தடுக்கும். அதன் மூலம் உலக வெப்பநிலையைக் குறைக்கும்.

இது விவசாயத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால் உலகம் முழுவதும் உணவுப்பற்றாக்குறை ஏற்படும். இதன் காரணமாக பஞ்சம் ஏற்படும். அத்துடன் கதிர்வீச்சினால் உடல்நலப் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பேரழிவை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய சிறுகோள் மோதியதால் டைனோசர்கள் அழிந்துவிட்டன என்று நம்பப்படுகிறது. இதனால் இந்த கோட்பாடும் உலக அழிவுக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு விண்கல் மோதினால் பெரிய அளவில் ஆற்றல் வெளிப்படும். இதனால் உலகளாவிய அழிவு, தீ மற்றும் சுனாமிகளை ஏற்படுத்தும்.

அத்துடன் கடும் குளிர்கால விளைவு உருவாகும். இதனால் ஏற்படும் காலநிலை மாறுதலால், பூமியில் உள்ள பெரும்பாலான உயிர்கள் அழியக்கூடும்.

வானிலை மாற்றங்கள் காடுகளை அழித்தல் மற்றும் அதிக இரசாயன பயன்பாடு உள்ளிட்ட மனித நடவடிக்கையால் ஏற்படும் காலநிலை மாற்றம், பூமியில் உயிரினங்களுக்கு பாரிய ஆபத்து ஏற்படலாம்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply