அவதூறு கடிதம் எழுதியவர் சிறையில்!

You are currently viewing அவதூறு கடிதம் எழுதியவர் சிறையில்!

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ப்ரீத்தி படேலுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் கடந்த ஆண்டு உள்துறை செயலாளராக செயல்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ப்ரீத்தி படேலுக்கு 2022ல் ஜனவரியில் கடிதம் ஒன்று அனுப்பட்டு இருந்தது.

அந்த கடிதத்தில் தனிப்பட்ட கடிதம் என்று கையால் எழுதப்பட்டு இருந்த நிலையில், அது அவரது அலுவலக ஊழியர் ஒருவரால் திறக்கப்பட்டது.

கடிதத்தின் உள்ளடக்கம் மிகவும் புண்படுத்தும் வகையிலும், கடுமையான அவதூறான வார்த்தைகளுடன் இருந்த நிலையில் எழுத்தாளரைக் கண்டுபிடிக்க தடயவியல் சோதனை பயன்படுத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ப்ரீத்தி படேலுக்கு அனுப்பட்ட கடிதத்தின் மேல் காகிதத்தில் பூணீராஜ் கனகியா(65) என்ற நபர் ஓட்டுநர் மற்றும் வாகன உரிமம் வழங்கும் நிறுவனத்திற்கு கடிதம் எழுதி இருப்பது கண்டறியப்பட்டது.

மேற்கண்ட விவரங்களை கொண்டு கனகியாவின் பெயர் மற்றும் முகவரியை பகுப்பாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர், மேலும் கடிதத்தில் இருந்த கையெழுத்தை கொண்டு அமைச்சர் ப்ரீத்தி படேலுக்கு எழுதிய கடிதத்தின் ஆசிரியர் கனகியா தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

ஆனால் கிழக்கு லண்டன் பகுதியை சேர்ந்த சுகாதார துறை ஊழியர் கனகியா முதன் முதலில் காவல்துறையினரால் நேர்காணல் செய்யப்பட்ட போது, அமைச்சருக்கு கடிதம் எழுதியது தான் இல்லை என்று மறுத்தார்.

இறுதியில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர் ப்ரீத்தி படேலுக்கு அநாகரீகமான அல்லது புண்படுத்தும் கடிதத்தை அனுப்பிய குற்றத்தை கனகியா ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து கடந்த வாரம் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பூணீராஜ் கனகியாவுக்கு ஐந்து மாதங்கள் சிறை தண்டனையை உறுதிப்படுத்தி உள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments