அவுஸ்திரேலியாவில் சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு விதிக்கப்படவுள்ள தடை!

You are currently viewing அவுஸ்திரேலியாவில் சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு விதிக்கப்படவுள்ள தடை!

குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுகுவதைத் தடுக்கும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப் போவதாக அவுஸ்திரேலிய (Australia) மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான சட்டம் ஒன்று இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சட்டத்தினூடாக 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரமே Facebook, Instagram, TikTok ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் இருந்து குழந்தைகளைத் தடை செய்வது என்பது ஆளும் கூட்டணியின் (அவுஸ்திரேலியாவின் லிபரல் கட்சி மற்றும் அவுஸ்திரேலியாவின் தேசியக் கட்சி) இரு பகுதிகளின் அதிகாரப்பூர்வக் கொள்கையாக உள்ளது.

சமூக ஊடக தளங்கள் போதை பழக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது.

மேலும், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள அரசாங்கங்கள் அனைத்தும் கடந்த மாதங்களில் சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிரான சட்டங்களை நகர்த்த முற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments