“Marienlyst” பள்ளியில் நான்காம் வகுப்பு ஆசிரியருக்கு இன்று மாலை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆசிரியர் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கவில்லை என்றும், இருப்பினும் அதே படிநிலையில் உள்ள மற்ற ஆசிரியர்களுடன் இவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, பள்ளியில் நான்காம் வகுப்பு ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Marienlyst பள்ளியின் அதிபர் “Berit Arnesen” கூறுகையில், ‘சிறிது நாட்களுக்கு முன் குறித்த ஆசிரியரிடம் கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டது, மருத்துவரால் இவர் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், இவர் மீண்டும் மோசமடைவதை உணர்ந்துள்ளார். ஆகவே அவர் மீண்டும் பரிசோதிக்கப்பட்டபோது, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது’ என்றார் .
நான்காவது தரத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால், புதன்கிழமை 4-வது வகுப்பு மாணவர்களை உள்வாங்குவது பள்ளிக்கு கடினமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“நாங்கள் தற்காலிக ஆசிரியர்களை பெற முயற்சித்தோம், ஆனால் அது சாத்தியப்படவில்லை. ஆகவே இது குறைந்தது, நாளை மற்றும் நாளை மறுநாள் வீட்டுப் பள்ளியாக இருக்கும்” என்று Arnesen கூறியுள்ளார்.
மேலதிக தகவல்: VG