ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட நாள்!

You are currently viewing ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட நாள்!

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது, இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்க்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

1760 இல்
ஒல்லாந்தரால்
உருவாக்கப்பட்ட
ஆனையிறவுத் தளம்
பிற்காலத்தில்
சிறீலங்கா படைகளின்
இருப்பாக மாறியது!
யாழ்ப்பாணத்திலிருந்து
ஏனைய மாவட்டங்களுக்கு
கடக்கும் பாதைகளில்
ஒன்றாக விளங்கியது!
சிங்கள இராணுவத்தின்
சோதனைச் சாவடிகளும்
அங்கங்கள் தடவும் ஆறாத
வடுவாகவும் திகழ்ந்தது!
சித்திரைவதைக் கூடமாகவும்
காணாமல் போனோரின்
சின்னமாகவும்
தமிழரின் சினத்தோடு
பிணைந்திருந்தது!
அசைக்கமுடியாதென
அயலவன் ஆணவத்தில்
மிதக்க
1991இல் ஆகாயகடல்வெளிச்சமரினால்
அசைத்துப்பார்த்தனர்
தமிழ்ப்படைகள்!
ஆட்டிலரிகள்
அழிக்கப்பட்டு
ஆட்டம் கண்டபோதும்
தமிழரின் வெற்றிக்கொண்டாட்டம்
பின்தள்ளப்பட்டது!
மீண்டும்
ஓயாத அலைகள் மூன்றில்
இரண்டாயிரமாம் ஆண்டு
இதேநாளில்
தமிழர்சேனைகளின்
தீரமிகு தாக்குதலில்
தீக்கிரையானது
எமை தாக்கியவரின்
தளம்!
240ஆண்டுகால
அடிமைச்சின்னம்
தானைத்தலைவன்
பிள்ளைகளின் படையெடுப்பில்
வீழ்ந்துபோனது!
செங்குருதியால்
உருவான
எங்கள் கொடி
வானிடை எழுந்து
பறந்தது!
முதற் தரையிறக்கம்
தொடக்கம்
ஆனையிறவு மீட்பு வரை
களமாடிய
உயிர்க்கொடிகளுக்கு
வீரவணக்கம்!!
✍தூயவன்
பகிர்ந்துகொள்ள

Leave a Reply