ஆபத்தான சந்தைகளை மூடுக! உலக சுகாதார நிறுவனம் சீனாவிடம் வேண்டுகோள்!!

You are currently viewing ஆபத்தான சந்தைகளை மூடுக! உலக சுகாதார நிறுவனம் சீனாவிடம் வேண்டுகோள்!!

“கொரோனா” பரவலுக்கு மூலகாரணமாக இருந்த சீனாவின் “Wuhan / வுஹான்” மாகாணத்தின் மாமிச சந்தை மீண்டும் இயங்குநிலைக்கு வந்துள்ள நிலையில், இதுபோன்ற ஆபத்தான சந்தைகளை மூடுமாறு உலக சுகாதார நிறுவனம் (WHO) சீனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://delivery.youplay.se/r/D705D

கொல்லப்பட்ட மற்றும் உயிருள்ள பிராணிகளையும், ஏனைய மாமிச வகைகளையும் விற்பனை செய்யும் சந்தைகளூடாக கிருமிகள் பரவும் ஆபத்து இருப்பதால் இவ்வாறான சந்தைகளை மூடுவதே பாதுகாப்பானதென தெரிவிக்கும் உலக சுகாதார நிறுவனம், 75 சதவிகிதமான வைரஸ் தொற்றுக்கள் மிருகங்களூடாகவே பரவுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் உட்பட, பெரும்பாலான மிருகங்களையும், உயிரினங்களையும் உயிருடனேயோ அல்லது கொல்லப்பட்ட நிலையிலேயே விற்பனை செய்யும் இவ்வாறான சீனத்து மாமிச சந்தைகளில், அங்கு வைத்து கொல்லப்படும் உயிரினங்களும், மிருகங்களும் தகுந்த முறையில் கொல்லப்படாமல், கவனக்குறைவோடு கொல்லப்படுவதால், மிருகங்களிலன் இரத்தமும், மலக்கழிவுகளும் எல்லா இடங்களிலும் சிதறியிருப்பதால் மக்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள