ஆபிரிக்காவில் எபோலாவுடன் (Ebola) மருத்துவக் களப்பணியில் இருந்த தால்லிங்கர் கருத்து!

You are currently viewing ஆபிரிக்காவில் எபோலாவுடன் (Ebola) மருத்துவக் களப்பணியில் இருந்த தால்லிங்கர் கருத்து!

நோர்வேயின் Bærum ( பாரூம்) மருத்துவ மனையின் அவசரகால பதிலளிப்புக் குழுவின் தலைவி மருத்துவர் மோனிக்கா தல்லிங்கர் ( Monika Thallinger) கூறுகையில்

மேலும் ஐனவரியில் சீனாவிலிருந்து வரும் கொரோனா தொடர்பான செய்திகளை உன்னிப்பாக கவனித்து வந்ததாகக் கூறுகிறார்.

மற்றும் ஆபிரிக்காவில் எபோலா ( Ebola) பரவிய போது அன்று களப்பணியில் இருந்த நினைவுகள் வந்தது. எனவே இன்று பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசின் தொற்றிலிருந்து பாதுகாக்க நோர்வே தயார் ஆக வேண்டும் என்ற உணர்வு தனக்கு வந்தது என்றும் தெரிவித்தார்.

மேலும் பெப்ரவரி மாத இறுதியில் தனது சக மருத்துவப் பணியாளர்களிடம் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுப் பயிற்சி அளிக்க வேண்டும் என் றும் கூறினேன். ஆனால் எனது சக பணியாளர்கள் இதனைக் கேட்டு சிரித்தார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த காலத்தில் Ullevål மருத்துவமனையின் கண் மருத்துவர் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தெரிய வந்தது. இதனை அறிந்த மக்கள் நோர்வேயிலும் கொரோனா தொற்று வந்து விட்டது என்று உணர்ந்துள்ளார்கள் என்பதை நான் உணர்ந்தேன் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள