ஆப்கானிஸ்தானில் தலிபான்களில் கை தொடர்ந்து ஓங்கி வருகிறது!!

You are currently viewing ஆப்கானிஸ்தானில் தலிபான்களில் கை தொடர்ந்து ஓங்கி வருகிறது!!

ஆப்கானிஸ்தானில் அரச படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையில் உக்கிர மோதல் தொடரும் நிலையில் தலிபான்களில் கை தொடர்ந்து ஓங்கி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களில் இரண்டு மாகாண தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தானில் புகழ்பெற்ற அரச ஆதரவு ஆயுதக் குழுத் தலைவா் அப்துல் ரஷீத் தோஸ்துமின் ஆதிக்கம் நிறைந்த ஜாவஸ்ஜன் மாகாணத் தலைநகா் ஷேபா்கான் நேற்று தலிபான்கள் வசமானது.

இரண்டு நாட்களில் தலிபான்கள் கைப்பற்றியுள்ள இரண்டாவது ஆப்கான் நகரம் இதுவாகும். முன்னதாக, நிம்ரோஸ் மாகாணத் தலைநகா் ஸராஞ் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வெள்ளிக்கிழமை வந்தது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் 20 வருடங்களின் பின்னர் கிட்ட்தட்ட முற்றாக வெளியேறிவிட்ட நிலையில் நாட்டை முழுமையாகக் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தலிபான்கள் திவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது கிட்டத்தட்ட நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் தலிபான்கள் வசம் உள்ள நிலையில் மேலும் பல நகரங்களை தலிபான்கள் கைப்பற்றி முன்னேறி வருகின்றனர்.

சர்வதேச படைகளின் வெளியேற்றம் காரணமாக சற்று பலவீனம் அடைந்துள்ள ஆப்கானிஸ்தான் படையினர், தலிபான்களின் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் அரசு படைகள் வசம் உள்ள முக்கிய நகரங்களை தலிபான்கள் விரைவாக கைப்பற்றி வருகின்றனர்.

இந்நிலை தொடர்ந்தால் அடுத்த 6 மாதங்களில் ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் வசமாகிவிடும் என அமெரிக்க உளவுத்துறையினர் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply