ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் குண்டுவெடிப்பு – உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்!

You are currently viewing ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் குண்டுவெடிப்பு – உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் ஆகஸ்ட் 17ம் திகதி மேற்கொள்ளப்பட்ட மாலை தொழுகையின் போது மிகப்பெரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. காபூலின் வடக்கு பகுதி மசூதியில் புதன்கிழமையான நேற்று மாலை தொழுகையின் போது மிகப் பயங்கரமான குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்து இருப்பதாகவும் NGO அவசரநிலை தெரிவித்துள்ளது.

தற்போதைய தகவலின் அடிப்படையில் இறந்தவர்களில் சித்திக் மசூதியின் இமாமும் ஒருவர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து வடக்கு காபூலில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் மற்றும் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் புலனாய்வுக் குழுக்கள் குவிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

குண்டு வெடிப்பில் குழந்தைகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது, அதில் ஏழு வயது குழந்தை உட்பட ஐந்து குழந்தைகள் இருந்தனர் எனத் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தலிபான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 35 பேர் காயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம், அத்துடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

காபூலின் கைர் கானா பகுதியில் வழிபாட்டாளர்கள் மத்தியில் இருந்த மசூதியில் இந்த வெடிப்பு சம்பவம் நடந்ததாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி தெரிவித்தார்.

மேலும் இந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தலிபான்களின் செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply