ஆப்கானிஸ்தான் நாட்டில் தெற்கே அமைந்துள்ள ஹெல்மாண்டில் உள்ள சங்கின் என்ற பகுதியில் அந்நாட்டின் ராணுவ தளம் அமைந்துள்ளது.
இந்த தளத்திற்குள் சுரங்கம் தோண்டி தலீபான் பயங்கரவாதிகள் உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் போராளிகள் தள வளாகத்திற்குள் செல்வதற்குள் வெடிகுண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதல் நடந்தபொழுது, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 18 வீரர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சம்பவத்தின்பொழுது 4 வீரர்கள் காயமடைந்தனர். 4 பேர் தைரியமுடன் எதிர்த்து போரிட்டனர்.
எனினும் தாக்குதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனை ஹெல்மண்டின் செய்தி தொடர்பு அதிகாரி உமர் ஜவாக் உறுதிப்படுத்தி உள்ளார். தலீபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பு நிர்வாகி ஜபியுல்லா முஜாகித் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளார்.