முல்லைத்தீவு – சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான வெடிக்காத துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு சிறீலங்கா காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்றையதினம் (14.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் பகுதி காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கடற்படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
அதனையடுத்து சிறீலங்கா கடற்படையினரும், முல்லைத்தீவு சிறீலங்கா காவற்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது T56ரக துப்பாக்கி ரவைகள் உர பையினில் இருப்பது அவதானிக்கப்பட்டிருந்தது.
சந்தேகத்திற்கிடமான வகையில் மீட்கப்பட்ட உரபையில் இருந்துT56ரக துப்பாக்கி ரவைகள் 1400 வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளை முல்லைத்தீவு சிறீலங்கா காவற்துறையினர் மீட்டெடுத்து பாெலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.