இலங்கையில் கடந்த காலகுற்றங்களிற்கு பொறுப்புக்கூறல் காணப்படாதது குறித்து அச்சமடைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை அதிகாரிகள் கடந்த கால ஆயுத மோதல்களை தூண்டிய அதேவகையான மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் மீண்டும் இடம்பெறக்கூடும் என எச்சரித்துள்ளனர்.
சுமார் 12 வருடங்களிற்கு முன்னர்; தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடனான இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்தது.
அன்று முதல் இலங்கையின் ஆட்சியாளர்கள் பொதுமக்களின் துயரங்களுக்கு தீர்வை காண்பதற்கோ அல்லது குற்றங்களை செய்தவர்களை பொறுப்புக்கூறச்செய்வதற்கே யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி நஸ்டஈடு வழங்குவதற்கோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என ஐநா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் மிகவும் கடுமையான அறிக்கையொன்று பாரிய மனித உரிமை மீறல்களில ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளமை,மற்றும் அனைத்து தரப்பினரினதும் மனித உரிமை மீறல்களும் முன்னரை விட என தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோத படுகொலைகள் பலவந்தமாக காணாமல்போகச்செய்தல் கண்மூடித்தனமாக தடுத்துவைத்தல் சர்வதேச மனித உரிமை சட்டமீறல்கள் ஏனைய வன்முறைகளை தனது அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றார் ஐக்கியநாடுகள் மனித உரிமை அலுவலக பேச்சாளர் ருவீனா சாம்டசானி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கங்கள் பல விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்தன என தெரிவித்துள்ள அவர் ஆனால் இவை எவற்றின் மூலமும் உறுதியான பலாபலன்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறல் குறித்த மிகவும் மந்தகதியிலான செயற்பாடுகளிற்கு அப்பால் சென்று பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளிற்கு அரசியல் ரீதியில தடைகளை விதிக்கும் விதத்திற்கு சென்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள கண்காணிப்புகள் துன்புறுத்தல்கள் சிவில்சமூக அமைப்புகள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சடடத்தரணிகள் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுதல் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளது.
தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை சமூகத்தினர் ஓரங்கப்படுவது அதிகரிப்பது குறிப்பிடத்தக்க கரிசனைக்குரிய விடயமாக காணப்படுகின்றது என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் மிக உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகளிடமிருந்து வெளியாகும் பாரபட்சம் மற்றும் பிளவுபடுத்தும் தன்மை மிகுந்த கருத்துக்கள் மக்கள் மேலும் துருவமயப்படுத்தப்படும் வன்முறை ஆபத்தை உருவாக்குகின்றன என அறிக்கையை தயாரித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தம் முடிவடைந்தபோது- பல அநீதிகள் இழைக்கப்பட்டபோது அதிகாரத்திலிருந்த பலர் தற்போது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக காணப்படுவது கவலையளிக்கின்றது என சாம்டசானி தெரிவிக்கின்றார்.
கடந்த வருடம் முதல் 28 முன்னாள் – பணியிலுள்ள இராணுவ புலனாய்வு அதிகாரிகளை ஜனாதிபதி முக்கிய பதவிகளிற்கு நியமித்துள்ளார் என குறிப்பிடும் அவர் ஆகவே இவர்களே அதிகாரத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றனர்,
இவர்களில் சிலர் யுத்தத்தின் இறுதிவருடங்களில் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்பதே மிகவும் கவலையளிக்கின்றது என குறிப்பிடுகின்றார்.