கணக்கெடுப்பு ஒன்றில், 92 விழுக்காடு நோர்வே மக்கள் தாங்கள் இன்று இலத்திரனியல் சேவைகளைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். இது கொரோனா தொற்றுநோய்க்கு முன் 78 விழுக்காடாக இருந்துள்ளது.
18 ஐரோப்பிய நாடுகளில் “McKinsey” செய்த ஆய்வு ஒன்றில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. 1,200 நோர்வே மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில், வட பிராந்தியத்தில் இணைய பயன்பாடு அதிகமாக அதிகரித்து வரும் நாடு நோர்வேதான் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் -19 தனிமைப்படுத்தல் நிலைமை, நுகர்வு மற்றும் வங்கி சேவை போன்ற அன்றாட பணிகளை புதிய வழிகளில் தீர்க்க மக்களை கட்டாயப்படுத்தியுள்ளது. சமூகத்தை தனிமைப்படுத்துவது இலத்திரனியல் பயனர் பழக்கத்திற்கான ஒரு வகையான நேர இயந்திரமாக இருந்து வந்துள்ளது என்று நோர்வேயில் McKinsey நிறுவனத்தின் இளைய பங்குதாரரும், இலத்திரனியல் நிபுணருமான “Theodor Vendrig” ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிப்புகளில், நெருக்கடிக்கு முன்னர் இருந்ததைவிட Netflix மற்றும் மளிகைப் பொருட்களை நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது . இந்த காலகட்டத்தில் இணைய பொழுதுபோக்கு மற்றும் இணைய மளிகை பொருட்கள் கொள்வனவு 50-60 விழுக்காடு அதிகரித்துள்ளது. இணைய வங்கி சேவையும் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மேலும் கணக்கெடுப்பில், முதல் முறையாக இலத்திரனியல் சேவையை பயன்படுத்துபவர்களில் 10 பேரில் 8 பேர் சமூகம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னரும் தாங்கள் இலத்திரனியல் சேவை பழக்கத்தை பராமரிக்கப் போவதாக கூறியுள்ளனர்.