எரிவாயு குழாயின் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்யத் தேவையான அனுமதிகள் வழங்கப்படாததால் அவற்றை ஆய்வு செய்ய முடியவில்லை. என நோர்ட் ஸ்ட்ரீம் ஏஜி செவ்வாயன்று தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய இரண்டு பைப்லைன்களிலும் கடந்த வாரம் நான்கு கசிவுகள் கண்டறியப்பட்டன.
இந்த கசிவு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்டு இருப்பதாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் மதிப்பாய்வுகளைச் செய்ய போதுமான அனுமதிகளுக்காக இன்னும் காத்திருப்பதாக நோர்ட் ஸ்ட்ரீம் நிறுவனம் தனது எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய இரண்டு நாடுகளும் பைப்லைனில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றன, அதே நேரத்தில் நோர்ட் ஸ்ட்ரீம் ஏஜியின் ஆய்வுக் கப்பல் புறப்படுவதற்கு நார்வே பச்சை விளக்கு கொடுக்க உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் நோர்ட் ஸ்ட்ரீம் நிறுவனம் தங்களது சொந்த விசாரணையை நடத்துவதற்கு முன், சேதங்கள் குறித்து போலீஸ் விசாரணைகள் முடிவடையும் வரை காத்திருப்பதாக RIA Novosti-விடம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கை தொடங்கியதை அடுத்து, பெர்லின் அரசாங்கம் எரிவாயு குழாய்க்கான சான்றிதழை இடைநிறுத்தி Nord Stream 2 பைப்லைன் செயல்பாட்டையும் பிப்ரவரியில் நிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.