கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்.கொடிகாமம் மாவீரர் நினைவேந்தல் மையத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் முதன்மைச்சுடரை நான்கு(4) மாவீரர்களின் சகோதரரான சி.சிவநேசன் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மேலும் யாழ். தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நடைபெற்றது.
இதன்போது உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
தேராவில் துயிலுமில்லத்தில் மாவீரர் வார ஆரம்ப நினைவு நிகழ்வு
மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில், நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் வாரம் ஆரம்பமாகும். இந்நாட்களில் தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும்.
மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடி முன்மாரி உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அந்தவகையில் தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணி மற்றும் முன்னாயத்த நடவடிக்கையில் மக்கள் இன்றையதினம் ஈடுபட்டிருந்தனர்.
மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு நிகழ்வு
மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று மல்லாவி ஆலங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில், நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் வாரம் ஆரம்பமாகும். இந்நாட்களில் தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும்.
இறுதி மாவீரர் நிகழ்வுகள் நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறும். அந்நாளில் தமிழ் மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடர் ஏற்றுவர்.
முல்லைத்தீவில் அமைந்துள்ள சாள்ஸ் நினைவு மண்டபம்
தமிழீழ மாவீரர் நாள் – 2024 ஐ சிறந்த முறையில் நினைவு கூரும் வகையில் முல்லைத்தீவு மாவட்டம் அம்பலவன் பொக்கனையில் அமைந்துள்ள சாள்ஸ் நினைவாலையத்தில் 20.11.2024 நடைபெற்ற சிரமதானப்பணி.
யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்
மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நடைபெற்றது.
தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது,
அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தலை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது,
இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.