நோர்வேயின் மிகப் பெரிய வீடு கட்டுமான நிறுவனமான OBOS, ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு வீட்டு அலுவலக – சுய தனிமைப்படுத்தலுக்கும் கட்டளையிட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் ஒரு முக்கியமான பார்வையை குறிக்கின்றது, இது இனவெறிக்கு எதிரான போராட்டம், இதை நாம் நூறு விழுக்காடு ஆதரிக்கின்றோம். அதே நேரத்தில், கோவிட் -19 நிலைமை எங்கள் ஊழியர்களுக்கும் சுற்றியுள்ள சமூகத்திற்கும் மிகவும் கடுமையான அச்சுறுத்தளாக உள்ளது என்று OBOS தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கமாக, இறுக்கமாக நிற்பது என்பது, கொரோனா தொற்றுநோய் தொடர்பாக அரசாங்கத்தின் தொற்று கட்டுப்பாட்டு விதிகளை தெளிவாக மீறுவதாகும். ஆகவே, பெரிய ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற நிறுவனத்தின் சுமார் 2,500 ஊழியர்களுக்கு இது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று OBOS தலைவர் மேலும் கூறியுள்ளார்.
ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தால், திங்கள் முதல் தனிமைப்படுத்தப்படுகின்றார்கள் என்றும் இதன் பொருள் ஊழியர்கள் வீட்டு அலுவலகத்திலிருந்து வேலையை கவனிக்க முடியும் என்றும் Siraj கூறியுள்ளார்.
மேலதிக தகவல் : NRK