ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவியை பொறுப்பேற்ற குறுகிய காலப்பகுதிக்குள் திருகோணமலை மாவட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றதாக திம்பிரிவெவ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பொல்லேங்கடுவ உபரத்னநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
இலுப்பைக்குளம், பொரலுகந்த ரஜமகா விகாரை விடயத்தில் ஆளுநர் மேற்கொண்ட தன்னிச்சையான தீர்மானங்கள் இனங்களுக்கு இடையில் வீண் பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் விகாரை அமைக்கும் விவகாரத்தில் தான்தோன்றித்தனமாக தீர்மானங்களை எடுப்பது இனமுறுகலுக்கு வழிவகுக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் விகாரையின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆளுநர் பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.