முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி நேற்று (06) முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்ற வடமாகாண ஆளுனர் வழங்கிய வாக்குறுதியினை தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டவர்கள் போராட்டத்தினை தற்காலிமாக கைவிட்டுய்யார்கள்இது தொடர்பில் போராட்ட களத்தில் இருந்தவர்கள் உண்ணாவிரத போராட்டத்தினை இன்று (07.09.2020) மாலை 4.00 மணியுடன் நிறைவிற்கு கொண்டுவந்தள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினால் மாவட்ட வைத்தியசாலை முன்பாக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் வடமாகாண ஆளுனரை சந்தித்துள்ளார்கள்.
ஆளுனர் கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக இன்று மாலையுடன் போராட்டத்தினை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளார்கள்.
வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கடந்த சில மாதங்களாக பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு நியமிக்கப்படுகின்ற வைத்தியர்கள் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்று செல்வதால் வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதாக முல்லைத்தீவு மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதுடன் இந்த பிரச்சனையினை மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தான் போராட்டம் நடத்தி வைத்தியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவேண்டும் என்றும் கடந்த மாதம் தெரிவித்துள்ளார்கள்.
சுகாதார அமைச்சினால் பெயர் குறிப்பிட்ட பயிற்சி நெறியினை நிறைவு செய்த வைத்தியர்களை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பசொல்லி கடிதம் அனுப்பியும் இதுவரை நிதந்தர வைத்தியர்கள் எவையும் யாழ் போதான வைத்தியசாலை நிர்வாகத்தினரால் அனுப்பிவைக்கப்படவில்லை ஒருவாரகால அவகாசம் ஆளுனர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த கால எல்லை நிறைவடைந்தும் வைத்தியர்கள் நிரப்பப்படாத நிலை காணப்பட்டால் தொடர்ந்தும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள்.