யாழ். வடமராட்சி- கட்டைக்காடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆழியவளை, பகுதியில் 85 கிலோவுக்கு அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 85 கிலோவுக்கு அதிகமான கஞ்சா போதைப் பொருள், ராணுவப் புலனாய்வுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் கட்டைக்காடு சிறீலங்கா காவற்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவை நீதிமன்றத்திடம் பாரப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகள் கட்டைக்காடு சிறீலங்கா காவற்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.