ஆழியவளை கிராம இளைஞர்களிடம் சிக்கிய டிப்பர் வாகனம்!

You are currently viewing ஆழியவளை கிராம இளைஞர்களிடம் சிக்கிய டிப்பர் வாகனம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த லக்ஸ்மிகா   டிப்பர் வாகனம் பிரதேச இளைஞர்களால் மடக்கப்பட்டு மருதங்கேணி சிறீலங்கா காவல்த்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 2:00 மணியளவில் சட்டவிரோதமாக நீண்ட நாட்களாக குறித்த பகுதியில் மணல் ஏற்றப்பட்டுக் கொண்டிருப்தை அவதானித்த கிராம இளைஞர்கள் அது தொடர்பில் ஆழியவளை கிராம சேவகர், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர்,சிறீலங்கா ஊடக காவல்த்துறையினரிடம் அறித்துள்ளனர்.

எனினும் சம்பந்தப்பட்டவர்கள் அது குறித்து எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது .

இந்நிலையில் இன்று அதிகாலையில் மணல் ஏற்றிக்கொண்டிருப்பதனை அவதானித்த ஆழியவளை கிராம இளைஞர்கள் அதனை சுற்றிவளைத்து அங்கிருந்து செல்லவிடாது தடுத்ததுடன் அது தொடர்பில் , ஆழியவளை கிராம சேவகர், மற்றும் பிரதேச செயலர் ஆகியோருக்கு பலதடவைகள் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியிருந்தனர்.

எனினும், தொலைபேசி அழைப்பிற்கு எந்தவிதமான பதிலும் கிடைக்காத நிலையில் மருதங்கேணி சிறீலங்கா காவல்த்துறையினரிடம் அறிவிக்கப்பட்டு அவர்களிடம் வாகனமும் சாரதியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வாகனத்தையும், சாரதியையும் காவல்த்துறையினர் இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments