இணைய விளையாட்டுக்கு அடிமையானமையால் ஏற்பட்ட மனவிரக்தியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த புஸ்பராசா எழில்நாத் (வயது – 22) என்ற கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழகம் மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
தாயும், தந்தையும் நேற்று தொழிலுக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். முற்பகல் 11 மணியளவில் தந்தை வீடு திரும்பியுள்ளார். இதன்போது மகன் உயிர் மாய்த்த நிலையில் இருந்ததை பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.