இத்தாலியில் புதிய ஆணை, மீறுபவர்களுக்கு 3000 யூரோக்கள் வரை அபராதங்கள்!

You are currently viewing இத்தாலியில் புதிய ஆணை, மீறுபவர்களுக்கு 3000 யூரோக்கள் வரை அபராதங்கள்!

இ ன்று 24-03-2020 இத்தாலியின் அமைச்சர் சபை ஒரு சிறப்பு ஆணையை அமுல்படுத்தியுள்ளது. பிரதமர் Conte, Facebook வழியாக, இவ் ஆணைச் சார்ந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். இவ் ஆணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் கீழே காணலாம்.

மத்திய அரசாங்கத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு

கடைசி நாட்களில் மாநில ஆளுநர்கள் கொரோனா நோய் பரவுதலை எதிர்கொள்வதற்கு அமுல்படுத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து இறுக்கமானச் சட்டங்களை விதித்துள்ளார்கள். இந்த விரிசலை நீக்குவதற்கு அரசாங்கம் மாநிலங்களுக்கு அவசரகால அதிகாரங்களைக் கொடுத்துள்ளது.
அதாவது மத்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட நெறிமுறைகளை விட, ஒவ்வொரு மாநிலத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு, மாநில ஆளுநர்கள் இறுக்கமான நெறிமுறைகளை அமுல்படுத்தலாம். ஆனாலும் அனைத்து நெறிமுறைகளும் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெற வேண்டும்.

400 யூரோக்கள் முதல் 3000 யூரோக்கள் வரை அபராதங்கள்.

இன்று புதிய சுய அறிவிப்புப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நகர்வுகளுக்கான கட்டுப்பாட்டுக்களை மீறுபவர்களுக்கு 400 யூரோக்கள் முதல் 3000 யூரோக்கள் வரை அபராதங்கள் விதிக்கப்படும். வாகனம் ஊடாக இந்த மீறல்களை மேற்கொண்டால் மூன்றில் ஒரு பங்கு வரை இந்த அபராதங்களை அதிகரிக்கலாம்

நன்றி

தமிழ் தகவல் மையம்

Tamil Info Point

பகிர்ந்துகொள்ள