1987-ம், ஆண்டு அமைதிப் படை என வந்து தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்ற இந்தியப் படைகள் – அதே ஆண்டு ஒக்டோபர் மாதம்- 21,22,ம் திகதிகளில் யாழ்ப்பாண போதனா மருத்துவ மனையில் புகுந்து கடமையில் இருந்த மருத்துவர்கள், தாதியர்கள், ஊழியர்கள், நோயாளர்கள்,என- 65,ற்கும், மேற்பட்டோரை ஈவிரக்க மின்றிச் சுட்டுப் படுகொலை செய்ததன்-36,வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
இதனை முன்னிட்டு இந் நினைவு நாள் நிகழ்வுகள் இன்று காலை-09.30, மணிக்கு யாழ்ப்பாண போதனா மருத்துவமனை முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது உயிரிழந்தவர்களின் உருவப் படம் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அன்றைய நாட்களில் அங்கு நடந்த சம்பவம் குறித்து கடமையில் இருந்த மருத்துவமனை ஊழியரும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருமான மு.ஈழத்தமிழ் மணியால் உரை நிகழ்த்தப் பட்டது.
இதில் உயிரிழந்தவர்களின் உறவுகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், மக்கள் பலரும் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியுள்ளனர்.